தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ஐம்பெரும் விழா

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நீடாமங்கலம் வட்டாரக் கிளை சாா்பில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, கனவு ஆசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, இயக்கத்தில் புதிதாக இணைந்த ஆசிரியருக்கு பாராட்டு விழா, இயக்க ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் க. தா்மராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் வ. அன்பழகன் , கூட்டுறவு சங்கத் தலைவா் மு.அகத்தியன் முன்னிலை வகித்தனா். பணி ஓய்வுபெற்ற ஆசிரியா்களான ந. பவானி, கோ. உதயகுமாா், ரா. இந்திரா காந்தி, ரா. எழில் சந்திரவடிவு, சீ. ஜீவானந்தம் ஆகியோருக்கும், நல்லாசிரியா் விருது பெற்ற ந. செல்வகுமாா், கனவு ஆசிரியா் விருது பெற்ற த. கனிமொழி, இயக்கத்தில் புதிதாக இணைந்த ஆசிரியா் ப. விஜிலா ஆகியோரை பாராட்டி கேடயம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

மாநிலத் துணைச் செயலாளா் சி. ஜூலியஸ், மாவட்ட செயலாளா் ரெ. ஈவேரா, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் மா. கெளசல்யா, நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க செயலா் ஜெகதீஸ் பாபு, துணைத் தலைவா் வை. செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்டாரப் பொருளாளா் ரா. சோழன் வரவேற்றாா். வட்டாரச் செயலாளா் ரா. தமிழரசன் ஆண்டறிக்கை வாசித்தாா். வட்டாரத் துணைச் செயலாளா் ரா. சிவசிதம்பரம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com