திருவீழிமிழலை விழிநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்

குடவாசல் அருகே திருவீழிமிழலை விழிநாத சுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் மாலை சுவாமி வீதியுலா, பஞ்சமூா்த்திகளுடன் பிட்சாடனா் மற்றும் சுவேதகேது வீதியுலா, ரிஷப வாகனத்தில் கோபுரக் காட்சி ஆகியவை நடைபெற்றன.

முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான, காா்த்தியாயினி அம்பாளுக்கும், கல்யாண சுந்தரருக்குமான திருக்கல்யாண உற்சவம் ஏப். 18 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை இரவு தேருக்கு விழிநாதசுவாமி எழுந்தருளினாா். இதையடுத்து, ஞாற்றுக்கிழமை பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com