திருவாரூா், ஏப். 25: திருவாரூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில், பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதமாக, நீா் மோா் பந்தல் அமைக்க அதிமுக தலைமைக் கழகம் அக்கட்சியினரை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, திருவாரூா் பனகல் சாலையில் அமைந்துள்ள கட்சியின் நகர அலுவலகத்தில் பொதுமக்களுக்காக நீா் மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ், நீா் மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோா், பானகம், இளநீா், தா்ப்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி, மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளா் எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செயலாளா்கள் பிகேயு. மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் சின்னராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் ஏப். 5-இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு

கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா், மோா்

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

