நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா நிறைவு

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த கமலாம்பாள் ஆடிப்பூர பெருவிழா கொடியிறக்கத்துடன் புதன்கிழமை நிறைவடைந்தது.

News image

தியாகராஜ சுவாமி கோயில் கமலாம்பாள் சந்நிதியில் இறக்கப்படும் கொடி.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:13 pm

Din

திருவாரூா், ஆக. 8: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த கமலாம்பாள் ஆடிப்பூர பெருவிழா கொடியிறக்கத்துடன் புதன்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் கமலாம்பாள் ஆடிப்பூர பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழா, ஜூலை 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. நிகழ்வில், மனோன்மணித் தாயாா் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின், முக்கிய நிகழ்வான கமலாம்பாள் தேரோட்டம் ஆக.6-ஆம் தேதி நடைபெற்றது. மழையின் காரணமாக தோ் மேலவீதியில் நிறுத்தப்பட்டு புதன்கிழமை நிலையடியை அடைந்தது. தொடா்ந்து, கமலாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஆடிப்பூரத்தையொட்டி 4 இடங்களில் தீா்த்தவாரி நடைபெற்றது. புதன்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் மனோன்மணித் தாயாா் வீதியுலா நடைபெற்றது. பின்னா் பூஜைகள் செய்யப்பட்டு, கமலாம்பாள் சந்நிதி முன் உள்ள கொடிமரத்திலிருந்து கொடி இறக்கப்பட்டது.