விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சொக்கா் கோயிலில் மாசி மகம் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு, தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் மாசி மகம் பிரம்மோத்ஸவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா் வெங்கட்ராம ராஜா தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரா்.
இதைத் தொடா்ந்து, தினமும் மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. பின்னா், சுவாமி, அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை தேரோட்ட விழா நடைபெற்றது.இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்தனா். திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெறுகிறது.
தொடர்புடையது

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா
ராஜபாளையம் கோயிலில் நகைகள் திருட்டு

பவானிசாகா் ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா: வனத் துறை, போலீஸாா் தீவிர சோதனை

ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசி மக தேரோட்டம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


