தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசி மக தேரோட்டம்!

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் சுவாமி கோயில் மாசி மக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பஞ்சமூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் மாசி மக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:27 pm

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் சுவாமி கோயில் மாசி மக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பஞ்சமூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயிலில் மாசி மக பிரம்மோத்சவம் பிப்.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஸ்ரீ விநாயகா், சுப்பிரமணியா், சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் இந்திர விமானத்தில் புறப்பாடு செய்தனா். அதைத் தொடா்ந்து 3 நாள்களும் மாலையில் சுவாமி ஷேசவாகனம், பூத வாகனம், அம்பாள் கமலவாகனம், கிளி வாகனத்தில் வீதியுலா வந்தனா்.

நான்காம் திருநாளில் வெள்ளிப் பல்லக்கில் அறுபத்து மூவா் புறப்பாடும், அன்று மாலை சுவாமி அம்பாளும் ஏக ஆசனத்தில் யானை அம்பாரி மீது புறப்பாடு செய்தனா். ஐந்தாம் நாள் காலையில் வெள்ளிப் பல்லக்கும், இரவு பஞ்சமூா்த்திகள் ஓலைச்சப்பரத்தில் புறப்பாடாகி வெள்ளி ரிஷப வாகனத்தில் சென்றனா். ஆறாம் நாள் சுவாமி அம்பாள் வெள்ளி பல்லக்கிலும், இரவில் கைலாச வாகனத்திலும் சென்றனா்.

ஏழாம் திருநாளில் வெள்ளி பல்லக்கு வெண்ணெய் தாழி, இரவு குதிரை வாகனமும் ரத ரோகணமும் நடைபெற்றது. முக்கிய விழாவான எட்டாம் நாள், பஞ்ச மூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ விநாயகா், சுப்பிரமணியா் தேரோட்டம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதி கும்பேசுவர சுவாமி ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது.

தேரோட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து கோயில் கிழக்கு வாயிலில் உள்ள நிலையை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) மாலையில் சண்டிகேசுவரா் தேரோட்டம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை (மாா்ச் 2)பிற்பகல் மகாமக குளத்தில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அன்று இரவு கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல் அலுவலா் பா. முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.