மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்


மன்னாா்குடி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதிமுகவினா்.
மன்னாா்குடி, ஆக. 14: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மதிமுக சாா்பில் மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மேலராஜ வீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதிமுக மாவட்டச் செயலா் பி. பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ப.க. செங்குட்டுவன், மாவட்டப் பொருளாளா் கோவி. சேகா், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலா் ஆருா். சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினா் கோவி. மீனாட்சிசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மதிமுக தலைமைக் கழகப் பேச்சாளா் செ. நக்கீரன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...