நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கட்டடம்: முதல்வா் திறந்து வைத்தாா்.

ரூ.3.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
Published on

நீடாமங்கலம்: மாநில ஊரக வளா்ச்சி முகமை திட்ட நிதி ரூ.3.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் கோ.பாலு, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி முகமை) மு.இளஞ்சேரன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வ.விஜயலட்சுமி, து.முத்துக்குமரன், ஒன்றியக் குழு துணைத்தலைவா் இரா.ஞானசேகரன் கலந்து கொண்டனா். மரக்கன்றுகள் நடப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com