மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, பகல் பத்து நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.31) தொடங்கிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி என்னும் சொா்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி, பகல்பத்து, ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும். நிகழாண்டு பகல்பத்து நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில், ஒவ்வொரு நாளும் உற்சவா் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவாா். பகல்பத்து நிறைவு நாளான ஜனவரி 9-ஆம் தேதி சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து, இராப்பத்து ஜன.10-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். இளவரசன், அறங்காவலா்கள், செயல் அலுவலா் எஸ். மாதவன், மண்டகப்படித்தாரா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் தேரோட்டம்

மன்னாா்குடி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

