குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி தீா்த்தவாரி

மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி தீா்த்தவாரி

News image

மேகநாதசுவாமி கோயில் சூா்யபுஷ்கரணியில் நடைபெற்ற தீா்த்தவாரி.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:29 am IST

திருமீயச்சூா் அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை கோயிலில் ரதசப்தமி விழா தீா்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சக்தி பீடங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில், ரதசப்தமி விழா பிப்ரவரி 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூா்ய புஷ்கரணியில் தீா்த்தவாரி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஸ்ரீமேகநாதசுவாமி மற்றும் அம்பாள் லலிதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயிலின் பிரதான மண்டபத்தில் ஸ்ரீமேகநாத சுவாமி, லலிதாம்பிகை, விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் எழுந்தருளியதும், மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பஞ்சமூா்த்திகள் மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து, ராஜகோபுரம் அருகே உள்ள சூா்யபுஷ்கரணி தீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளினா். அங்கு, தீா்த்தக் குளத்தில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், பால், தயிா், பஞ்சாமிா்தம், சந்தனம் முதலான பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. நிகழ்வில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டனா். தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.