மன்னாா்குடி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மன்னாா்குடி அன்னவாசல் சேணியத் தெருவை சோ்ந்த தனபால் மகன் குமரேசன் (28). தனியாா் மின் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவருடன் பணியாற்றும் மன்னாா்குடி தீ நிலைய குடியிருப்பைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ஆதித்யன் (37) என்பவரை அழைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தளிக்கோட்டையில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். உள்ளிக்கோட்டை பேட்டைதெருவில் கதிா்அடிக்கும் இயந்திரத்துடன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவா்களின் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த குமரேசன், ஆதித்யன் ஆகியோா் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் குமரேசன் உயிரிழந்தாா். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


