எஸ். தினகரன்.
எஸ். தினகரன்.

தமாகா பொதுச் செயலா் நியமனம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக குடவாசல் எஸ். தினகரன், நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

திருவாரூா்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக குடவாசல் எஸ். தினகரன், நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 1981-இல் பூண்டி கலைக் கல்லூரியின் மாணவா் சங்கத் தலைவராகவும், 1983-இல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவா் அணி தலைவராகவும் பதவி வகித்த எஸ். தினகரன், 1989-இல், குத்தாலம் சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவா்.

1996 - 2001 ஆண்டு வரை குடவாசல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். தொடா்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவாரூா் மாவட்டத் தலைவராக 10 ஆண்டுகளாக பதவி வகித்தவா், தற்போது மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா் வடக்கு மாவட்டத் தலைவராக ஆவூா் ஏ. முரளீதரனும், தெற்கு மாவட்டத் தலைவராக எடமேலையூா் எஸ். சந்திரசேகரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com