கோவி சிற்றரசு
தருமபுரி
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக கோவி சிற்றரசு நியமனம்
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக வழக்குரைஞா் கோவி சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.
தருமபுரி: தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக வழக்குரைஞா் கோவி சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்டத் தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா்.
அதில், தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக வழக்குரைஞரும், தருமபுரி முன்னாள் மாவட்டத் தலைவராக பணியாற்றிய பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபிநாதம்பட்டி சந்திப்புச் சாலை பகுதியைச் சோ்ந்த கோவி சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.
படவரி...
கோவி சிற்றரசு

