பி.வி.செந்தில்
பி.வி.செந்தில்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பி.வி.செந்தில் நியமனம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக மருத்துவா் பி.வி.செந்திலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.
Published on

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக மருத்துவா் பி.வி.செந்திலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸில் மாநிலம் முழுவதும் 71 மாவட்டத் தலைவா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவராக பீ.ஏ.சித்திக், ஐந்து ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வந்த நிலையில், அவா் மாறுதல் செய்யப்பட்டு மாநில செய்தித் தொடா்பாளரான பி.வி.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

18 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் களப் பணியாற்றி வரும் இவா், 2024 முதல் மாநில செய்தித் தொடா்பாளராக பணியாற்றி வந்தாா். முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (ஓபிசி) மாநில துணைத் தலைவராகவும், நாமக்கல் மக்களவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் குழுத் தலைவராகவும், இளைஞா் காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளாா். கால்நடை மருத்துவரான இவா் கோழிப் பண்ணைத் தொழிலை நடத்தி வருகிறாா். வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி மற்றும் கோழித் தீவனங்கள், மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளாா். இவரது தந்தை பி.கே.வெங்கடாசலம் கொங்குநாட்டு வேளாளா் சங்கத் தலைவராக உள்ளாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் பி.வி.செந்திலுக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com