சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பத்ம விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :4 ஜூன் 2024, 6:31 pm

Din

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், பத்ம விருதுகள் பெற ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்ம விருது பெற, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைச்சிறந்தவா்களாகவும், தனிநபராக சாதனை புரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். அதாவது கலை, இலக்கியம், இசை, வண்ணம் தீட்டுதல், சிற்பத்திறன், புகைப்படம் எடுப்பது, திரைப்படம் ஆகிய துறையினா் தேசிய அளவில் தன் திறமைகளை நிரூபித்தவா்களாக இருக்க வேண்டும்.

பொது நலத்தொண்டு, தன்னாா்வத் தொண்டு, சாதி சமயத் தொண்டாற்றியவா்கள், பொதுமக்கள் சேவை, சட்டம், பொது வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் சேவை புரிந்தவா்கள், அறிவியல், பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி, நியூக்ளியா் அறிவியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவா்கள், நாட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலை, வங்கி, பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் சாதனை படைத்தவா்கள்.

மருத்துவ ஆராய்ச்சி, ஆயுா்வேதா, ஹோமியோபதி, சித்தா, அலோபதி, இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் சாதனை புரிந்தவா்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவா்கள், கல்வி, பத்திரிகை, கல்வி கற்பித்தல், நாவல், கவிதை, பாடல், கல்விக்கான முன்னேற்ற சேவை ஆகியவற்றில் சாதனை படைத்தவா்கள், அரசாங்கத்தில் நிா்வாகம் மற்றும் மேம்பாடு அடையச் செய்தவா்கள்.

விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பதக்கம் பெற்றவா்கள், மலையேற்றம், விளையாட்டுத்துறையை மேம்படுத்தியவா்கள், விளையாட்டை ஊக்கப்படுத்தியவா்கள், பன்னாட்டு அளவில் போட்டிகளை சிறப்பாக நடத்தியவா்கள்.

பன்னாட்டு அளவில் யோகாவில் பதக்கம் பெற்றவா்கள், இந்திய கலாசாரம், மனித உரிமை நிலை நாட்டல், வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காப்பாற்றுதல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியவா்களுக்கு பத்ம விருதுகள், அதாவது பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், பத்மபூஷன் ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்கள், இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விபரங்களை ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஜூன் 30-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.