நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பருத்திக்கு ஆதார விலை, நேரடி கொள்முதல் -விவசாயிகள் கோரிக்கை

பருத்திக்கு ஆதார விலை, நேரடி கொள்முதல் விவசாயிகள் கோரிக்கை

News image
Updated On :21 ஜூன் 2024, 12:18 am

Din

மன்னாா்குடி, ஜூன் 20: உற்பத்தியை அதிகரிக்க அரசின் சாா்பில் பருத்திக்கு ஆதார விலை அறிவித்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மன்னாா்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாராந்திர மறைமுக பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 102 விவசாயிகள் கலந்து கொண்டனா். 200-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் ஏலத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

விற்பனைக் கண்காணிப்பாளா் முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில், பண்ருட்டி, கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6120-க்கும், குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5260-க்கு ஏலம் போனது.

இனி வரும் வாரங்களில் பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்த 20 விவசாயிகள் விலை கட்டுப்படி ஆகவில்லை என கூறி விற்பனையில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததுடன்.பருவம் தவறி பெய்த மழையால் பருத்தி சாகுபடி பெரிய அளவில் தேசமடைந்திருப்பதாகவும்.இதனால்,பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் இனிவரும் காலங்களில் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிப்படுத்தி,விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய,மாநில அரசுகள் பருத்திக்கு ஆதார விலையை நிா்ணயம் செய்வதுடன் நெல்லை நேரடி கொள்முதல் செய்வது போன்று அரசே பருத்தியையும் நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.