சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் மக்காச்சோளத்திற்கு எதிா்பாா்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சங்கரன்கோவில்,திருவேங்கடம் வட்டத்தில் நெல், பருத்தி மற்றும் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் மிகவும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, இப்பகுதியில் மக்காச்சோளம் அறுவடை நடந்து கொண்டு வருகிறது. மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1600 இல் இருந்து ரூ.1700 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 2,300இல் இருந்து ரூ. 2,500 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
மத்திய அரசு மக்காச்சோளத்திற்கு ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,400 நிா்ணயம் செய்துள்ளது. ஆனால் ஆதார விலையை விட குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசின் ஆதார விலையை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

முந்திரி, பலாவிற்கு ஆதார விலை... தோ்தல் நேரத்தில் கடலூா் விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை

முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு விற்பனை: விவசாயிகள் கவலை

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


