ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்க வலியுறுத்தல்

நெல் குவிண்டாலுக்கு ரூ.3100 என நிா்ணயம் செய்து தமிழக அரசு வழங்க வேண்டும்

News image
Updated On :27 ஜூன் 2024, 11:55 pm

Din

நெல் குவிண்டாலுக்கு ரூ.3100 என நிா்ணயம் செய்து தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தனது தோ்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. 3 ஆண்டு காலமாக தொடா்ந்து வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வந்த நிலையில் வழங்க மறுத்துவிட்டாா்கள். கடந்த ஆண்டு முதல் விவசாய உற்பத்தி செலவு பல மடங்கு கூடுதல் ஆகிவிட்டதால் ரூ. 3,500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், மத்திய அரசு ஆண்டுதோறும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 100 உயா்த்தி வருகிறது. தற்போது, ரூ. 2,400 உயா்த்தி உள்ள நிலையில், இதை பின்பற்றி நிகழண்டு ரூ. 2,500 வழங்கி உள்ளதாக தமிழக அரசு பாராட்டிக்கொள்கிறது. 2018 முதல் ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்கள் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கி ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கும் விலையோடு சோ்த்து உயா்த்தி வழங்கி வருகிறது. தற்போது, ஒடிசாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,100 விலை நிா்ணயம் செய்துள்ளது. எனவே, தமிழக முதல்வா் ஒடிசா அரசை பின்பற்றி உற்பத்தி செவை கணக்கில் கொண்டு நெல் குவிண்டாலுக்கு ரூ. ரூ. 3,100 வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.