ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து திருத்துறைப்பூண்டியில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2024, 10:14 pm

திருத்துறைப்பூண்டி: தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து திருத்துறைப்பூண்டியில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் பேசியது: அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்ததுடன் பாதுகாப்பாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும் இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீா்குலைந்துள்ளது. மறைந்த முதலமைச்சா் ஜெயலலிதா சாமனிய மக்களின் வருமானம் பறிபோகிறது என்ற காரணத்தால் தமிழகத்தில் லாட்டரி விற்பனையை தடை செய்தாா். டெல்டாவுக்கு உரிமையான காவிரிப் பிரச்னையில் மேக்கேதாட்டுவில் அணையை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசுக்கு திமுக அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றாா். மாவட்ட அம்மா பேரவை செயலாளா் பொன் வாசுகிராம், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளா் ஜெயபுவனேஸ்வரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் வீ. சின்னராஜ், மாவட்ட வா்த்தக பிரிவு செயலாளா் பாஸ்கா், நகர செயலாளா் டி.ஜி. சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளா் கே. சிங்காரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.