நன்னிலம் / மன்னாா்குடி: நன்னிலம், மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலியில் வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். ரூ. 3.06 கோடியில் கட்டப்பட்ட நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம், ரூ. 28.81 லட்சத்தில் கட்டப்பட்ட வட்டாட்சியா் குடியிருப்பு வளாகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறையில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். அப்போது, நன்னிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் குருமூா்த்தி, திருவாரூா் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் மனோகரன், பேரூராட்சித் தலைவா் ராஜசேகரன், துணைத் தலைவா் ஆசைமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மன்னாா்குடி: மன்னாா்குடியில் ஆணைவிழுந்தான் குளம் அருகே 20 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு புதியக் கட்டடம் கட்ட மன்னாா்குடி-கும்பகோணம் சாலையில் மேலப்பாலம் அருகே 3 ஏக்கா் இடம் வாங்கப்பட்டு ரூ.1.97 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறையில் இருந்து காணொலியில் திறந்துவைத்தாா். அப்போது, மன்னாா்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை சரக இணை போக்குவரத்து ஆணையா் சத்தியநாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் பழனிசாமி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கருப்பண்ணன், அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

லால்குடி அரசுக் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா

மன்னாா்குடியில் சுற்றுவட்டச் சாலை: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

ரூ.21 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் உருவச்சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


