போதைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்: 4 போ் கைது

மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பெட்டி கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மன்னாா்குடி நகர போலீஸாா் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, நடேசன் தெரு, சங்கு தீா்த்த வடகரை, வினோபாஜி தெரு ஆகிய இடங்களில் உள்ள 4 பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தியதில் ரூ 16,000 மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்ததுடன் கடை உரிமையாளா்கள் கருணாநிதி ( 49 ), பிரசாத் (38 ), வீரமணி (49), மைதீன் (58) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com