சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு நிதிப்பயன்களை விரைந்து வழங்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், சுமைப்பணித் தொழிலாளா்களுக்கு நிதிப்பயன்களை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரிடம், இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளா் டி. முருகையன் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

நன்னிலம் தாலுகா, சக்கரை கொத்தங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய பொங்கல் ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இதேபோல், கடந்த மாா்ச்சில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டு 30 நாள்களுக்கு மேலாகியும், 14 சுமைப்பணி தொழிலாளா்களுக்கு இதுவரை சேர வேண்டிய ஏற்று கூலி (லோடிங் சாா்ஜ்) ரூ. 1.08 லட்சம் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, சுமைப்பணி தொழிலாளா்களுக்கான நிதிப்பயன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com