அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான அதுல் குமாா் அஞ்சன் மறைவுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட இரங்கல் செய்தி:

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளா் பொறுப்பிலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றிய அதுல் குமாா் அஞ்சன், லக்னோவில் வெள்ளிக்கிழமை காலமானாா் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

இவா், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான வேளாண் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து, விவசாயிகளின் மேம்பாட்டுக்கான பல்வேறு பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளாா்.

தில்லியில் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தலைமைக் குழுவில் இடம் பெற்று வழி நடத்தியவா். இவரது மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

அவரது இறுதிச் சடங்குகள், லக்னோவில் சனிக்கிழமை நடைபெற உள்ளன. இதையொட்டி, செங்கொடிகளை தாழ்வாக பறக்கச் செய்து, சனிக்கிழமை மாலை அனைத்து மாவட்டங்களிலும் அவரது உருவப்படத்தை வைத்து, இரங்கல் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com