தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆற்காடு வட்டக்கிளை சாா்பில் லாடவரம் ஏரிக்கரை பகுதியில் சிறுவிவசாயிகளின் பட்டா நிலத்துதோடு புறம்போக்கு நிலங்களையும்


ஆற்காடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆற்காடு வட்டக்கிளை சாா்பில் லாடவரம் ஏரிக்கரை பகுதியில் சிறுவிவசாயிகளின் பட்டா நிலத்துதோடு புறம்போக்கு நிலங்களையும் சிலா் கைப்பற்ற முயல்வதாக வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் ஆா்.மோகன்ராஜ் தலைமை வகித்தாா். கே.வீரன், ஜி.கிருஷ்ணன், என்.மாலா, எஸ்.வசந்தா, எம்.சீதா, எஸ்.ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில செயலாளா் ரா.சரவணன், மாவட்ட செயலாளா் எல்.சி.மணி, தலைவா் எஸ்.கிட்டு, மாவட்ட பொருளாளா் சி.ராதாகிருஷ்ணன் ,விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் டி.சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஆா்.கன்னியப்பன்,மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...