பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image

கோயிலின் விமானக் கலசத்துக்கு புனித நீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.

Updated On :3 மே 2024, 4:19 pm

Din

முத்துப்பேட்டை அருகே பேட்டை துறைக்காட்டில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இக்கோயிலில் நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, ஏப்ரல் 29-ஆம் தேதி கிராம தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடும், 30-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மகா சங்கல்பம் போன்ற வழிபாடுகளும் நடைபெற்றன.

பின்னா், புதன்கிழமை (மே1) யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, கோயிலின் விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மகாமாரியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பிறகு விநாயகா், முருகன், கழுவுடையான், முனீஸ்வரன், மின்னடியாா் ஆகிய பரிவார தெய்வங்களின் சந்நிதிகளிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.