திருவாரூா் அருகே மணக்கால் ஆபத்து காத்த விநாயகா் கோயில் முன், மக்கள் சக்தி சேவை அமைப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போா்வெல் சேதப்படுத்தப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடைபெற்ற கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் தென்னரசு தலைமை வகித்தாா்.
ஊராட்சித் தலைவா் என். ராஜகோபால், மாவட்ட செங்குந்த மகாஜன கல்வி சங்க பொருளாளா் இன்பமூா்த்தி, நிா்வாகப் பொறுப்பாளா் என். அமிா்தலிங்கம், மணக்கால் புலவநல்லூா் விவசாய சங்க இணை ஒருங்கிணைப்பாளா் எம்.என். மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பேசிய தென்னரசு, ‘மணக்கால் ஊராட்சி புலவநல்லூரில் ஆக்கிரமிப்பு தொடா்பாக திருவாரூா் சாா்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, விவசாய போா்வெல் சேதப்படுத்தப்பட்டதற்காக காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாா் மனுவின் விசாரணையில் இருந்து தப்பிக்க, பதிவு செய்யப்பட்ட உண்மைக்கு புறம்பான வழக்கு. எனவே, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை’ என்றாா்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவுக்கு நூதன அழைப்பு

தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட் திறந்திருக்க உத்தரவு

தூத்துக்குடி சக்தி பீடத்தில் சிறப்பு வழிபாடு

முத்தான முத்தல்லவோ...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

