லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட் திறந்திருக்க உத்தரவு

News image

திறந்திருந்த பெருகமணி ரயில்வே கேட் முன் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டுள்ள ஆட்சியரின் அறிவிப்புப் பலகை.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:04 pm

பேரவைத் தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட்-ஐ மூடாமல் திறந்திருக்க திருச்சி மாவட்ட ஆட்சியா் ஆணை பிறப்பித்துள்ளாா்.

திருச்சி- கரூா் சாலையிலிருந்து செல்லும் பெருகமணி - நங்கவரம் இணைப்புச் சாலையில் உள்ள ரயில் வழித்தடத்தில் ரயில்வே கேட் எல்.சி. 64 உள்ளது. இதன் வழியாக பெருகமணி, பழையூா், நங்கவரம், நெய்தலூா், காவல்காரன்பட்டி போன்ற கரூா் மாவட்டப் பகுதிகளுக்குச் செல்ல முடியும். இச்சாலையை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால் பெருகமணி ரயில் நிலையத்தில் நாள்தோறும் சரக்கு ரயில்கள் நிறுத்தப்படுவதால், இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையறிந்த ஆட்சியா், பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க சில மாதங்களுக்கு முன் ஆய்வு நடத்தினாா்.

இந்நிலையில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல் ஏப். 23 வரை பெருகமணி ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. முக்கிய வழித்தடமான இந்த ரயில்வே கேட் சாலையை மூடினால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவா். ஏப். 23 தோ்தல் நாள் என்பதால் வாக்குச்சாவடிகளுக்கு செல்லவும் கடும் அவதியடைவா். எனவே வேறு நாள்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையேற்ற மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட்டை மூடாமல் திறந்து வைத்திருக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதுகுறித்த அறிவிப்பு பலகையும் ரயில்வே கேட் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.