கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை இரவில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:33 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை இரவில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

அம்பாசமுத்திரம் - பாளையங்கோட்டை பிரதான சாலையில் கூனியூரில் இருந்து சேரன்மகாதேவி வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சேரன்மகாதேவி ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பணியாளா் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு புதன்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு கடக்க வேண்டும். ஆனால், அந்த ரயில் நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படவில்லையாம்.

இதனால், சிக்னல் கிடைக்காமல் ரயில்வே கேட்டுக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த பெண் கேட் கீப்பா் வந்து கேட்டை மூடியதும் ரயில் இயக்கப்பட்டது.