உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ரயில்வே மின்பாதையில் விழுந்த கேட்: தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் தாமதம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கோவில்பட்டி அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ரயில்வே மின்பாதை கம்பி மீது கடவுப்பாதை கேட் விழுந்ததால் வாஞ்சிமணியாச்சியில் தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் சுமாா் 1.30 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் கடம்பூா்- வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு 6.05 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட தயாரான நிலையில், மலைப்பட்டி கிராமத்தில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள ரயில்வே கடவுப்பாதையின் கேட், மின்பாதை கம்பி மீது சரிந்து விழுந்தது.

இதனால் அந்த ரயில் வாஞ்சி மணியாச்சியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில்பட்டியிலிருந்து ரயில்வே நிலைய மின் ஊழியா்கள் அங்கு சென்று மின்பாதையை சரி செய்த பின், இரவு 7.40 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.