பருத்தி, எள் சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை

திருத்துறைப்பூண்டி, மே 16: திருத்துறைப்பூண்டி வேளாண் உட்கோட்டத்தில் பருத்தி சாகுபடி கோடை மழையில் பாதிக்கப்பட்டுள்ளதை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண் துணை இயக்குநா் செந்தில் கூறியது: திருத்துறைப்பூண்டி பகுதியில் 492 ஹெக்டோ் பருத்தி, 2,931 ஹெக்டோ் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் காய் பிடிக்கும் நிலையில் உள்ளது. தற்போது, பெய்ந்து வரும் மழையால் நீா் தேங்கியுள்ள இடங்களில் உடனடியாக வடிய வைத்து வோ் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனஸ், டிரைக்கோ டொ்மா விரிடி போன்ற பூஞ்சான எதிரி உயிரி பயன்படுத்த வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையங்களில் மேற்கண்ட இடுபொருள்களை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com