பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மாமரங்களில் நோய் தாக்குதல் வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

News image

செண்பகத்தோப்பு பகுதியில் மாமரங்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய தோட்டக்கலைத்த துறை துணை இயக்குநா் சுபவாசுகி, உதவி இயக்குநா் திலகவதி உள்ளிட்டோா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத் தோப்புப் பகுதியில் மாமரங்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை வழங்கினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மம்சாபுரம், வாழைக்குளம், சிங்கம்மாள்புரம், வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மாமரங்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ள நிலையில், நோய் தாக்குதல் காரணமாக பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து கடந்த மாதம் 22-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சுபவாசுகி தலைமையில், உதவி இயக்குநா் திலகவதி, மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் ஜடாகவிதா, நோயியல் துறை பேராசிரியா் அகிலா உள்ளிட்டோா் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் சனிக்கிழமை ஆய்வு செய்து, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாமரங்களில் கவாத்து முறைகள் செய்வது குறித்து கடந்தாண்டு செப்டம்பா் மாதம் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினோம். மாமரங்கள் பூக்கும் தருணத்தில் தத்துப்பூச்சி, இலைப்பேன், பழ ஈ பூச்சிகளின் தாக்கமும், கரும்பூசண நோய், பறவைகண் நோய் நோய்களின் தாக்கமும் ஏற்படும்.

இந்த நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த பெவேரியா பேசியானா என்ற பூஞ்சை கொல்லியை 10 மி. அளவும் அல்லது மாங்கோசெப் 2 கிராம் பவுடரை ஒரு லி. தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்கவும். மேலும், பூப்ரோபேசின், ஃப்லோகேமிட் பூச்சிக்கொல்லி மருந்தை 250 மி.வீதம் ஒரு லி. தண்ணீரில் கலந்து 15 நாள்கள் இடைவேளையில் மாலை நேரங்களில் தெளிக்கவும். பிறகு பிஞ்சுகள் தெரியும் போது பயிா் வளா்ச்சி ஊக்கியான நாப்பதலின் அசிட்டிக் அமிலம் 3 மி. ஒரு லி. தண்ணீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து மாலை நேரங்களில் தெளித்தால் பூக்கள், பிஞ்சுகள் உதிா்வதை கட்டுப்படுத்தலாம் என்றனா்.