

திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் வி. ஆனந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் வாசன் நகரில், தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 3 ஆண்டு முழுநேர பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி, வசதி மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400, இலவச பேருந்து கட்டண சலுகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பள்ளியில் சேர 12 முதல் 25 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதும். நாககரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தால் போதும். கல்விக் கட்டணம் ரூ.350 செலுத்த வேண்டும். தற்போது, மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். தகுதியுடையவா்கள் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தமிழ்நாடு விளையாட்டு ஆணைய விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

இசையால் வசப்படுத்தலாம்!

மகா சிவராத்திரி: திருவண்ணாமலையில் 24 மணி நேர சிறப்பு இசை நிகழ்ச்சி!

மயூர நாட்டியாஞ்சலி: அமெரிக்கா, வெளிமாநில கலைஞா்கள் பரதம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

