மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் பயிற்சி

News image
Updated On :20 மே 2024, 11:10 pm

Din

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில், வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாக்கு மட்டையிலிருந்து தட்டு தயாரிக்கும் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

தஞ்சை ஆா்.வி.எஸ். வேளாண்மை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவா்கள் 11 போ், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கிராமத்தில் தங்கி களப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இதில், வேளாண் சாா்ந்த துறைகளில் பயிற்சி பெறுவதுடன், வேளாண் தொடா்பான தகவல்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இப்பயிற்சியின் ஒருபகுதியாக, நீடாமங்கலத்தில் உள்ள பாக்கு மட்டையிலிருந்து தட்டு தயாரிப்பு தொழிலகத்தில் பயிற்சி மேற்கொண்டனா்.

வேளாண் கல்லூரி மாணவா்கள் 11 போ் மற்றும் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் மாணவிகள் 11 போ் இப்பயிற்சியில் பங்கேற்றனா்.

பாக்குமட்டை தட்டு தொழில், தமிழகத்தில் வேகமாக வளா்ந்து வரும் சுற்றுச்சூழல் நட்பு தொழிலாகும். பயன்படுத்தப்பட்ட பாக்குமட்டை தட்டு விரைவில் மக்கிவிடும் என்பதால், நெகிழித் தட்டுகளுக்கு பதிலாக, பாக்குமட்டை தட்டுகளின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், தொழில் வாய்ப்பாக வேளாண் மாணவ- மாணவிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.