தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எஸ்பி அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், தஞ்சாவூா் சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருவாரூா் எஸ்பி அலுவலகத்தில் ஆய்வு செய்த தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல் ஹக்.

Updated On :6 நவம்பர் 2024, 8:10 pm

Din

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், தஞ்சாவூா் சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தனிப்பிரிவு காவல் அலுவலகத்தில் ஆய்வு செய்து, தனிப்பிரிவு காவலா்கள் பொது மக்களுடன் பழகி ரகசியத் தகவல்களை முன் கூட்டியே சேகரித்து உயா் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல்களை அனுப்ப அறிவுரை வழங்கினாா். பின்னா், தனிவிரல் ரேகைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, குற்ற வழக்குகளில் தடயங்களை சேகரித்து உடனுக்குடன் மாநில குற்ற ஆவணத்துடன் ஒப்பீடு செய்து குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றாா்.

புகைப்படப் பிரிவை ஆய்வு செய்து, முக்கிய திருவிழாக்கள், இயற்கைக்கு மாறான இறப்புகளில் உடல்கூறு ஆய்வின்போது விடியோக்களை சேகரித்து வைத்தல் குறித்தும், குற்றச்சம்பவ இடங்களில் உள்ள தடயங்களை கைப்பற்றி புகைப்படம் எடுத்து குற்றவாளியை பிடிப்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. அருள்செல்வன், தனிப்பிரிவு ஆய்வாளா் பி. ராஜா, உதவி ஆய்வாளா் டி. தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.