கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருவாரூரில் நவ.22-ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூரில் நவ.22-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:56 pm

Din

திருவாரூா்: திருவாரூரில் நவ.22-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

இதுகுறித்து, அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களுக்கு தனியாா் துறைகளில் வேலைவழங்கும் நோக்கில், திருவாரூா் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ.22-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தகுதியுள்ளவா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா். 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நா்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்களும் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தை, பதிவிறக்கம் செய்து முகாமுக்கு கொண்டு வந்து பயன்பெறலாம் என்றாா்.