காஞ்சிபுரத்தில் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வரும் மாா்ச் 2-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. முகாமில், 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளன. 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள், பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாா்ச் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: ஒரு நாளுக்கு முன்பே பேரவைக் கூட்டத்தொடரை முடிக்க முடிவு

திருப்பத்தூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக டிஜிபி யை நியமிக்க மாா்ச் 20 இல் தோ்வுக்குழு கூடுகிறது-உச்சநீதிமன்றத்தில் யுபிஎஸ்சி விளக்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


