ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: ஒரு நாளுக்கு முன்பே பேரவைக் கூட்டத்தொடரை முடிக்க முடிவு

கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தலை முன்னிட்டு ஒரு நாளுக்கு முன்னதாகவே பேரவைக் கூட்டத்தொடரை நிறைவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

சட்டப்பேரவைத் தேர்தல்

பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:42 am

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தலை முன்னிட்டு ஒரு நாளுக்கு முன்னதாகவே பேரவைக் கூட்டத்தொடரை நிறைவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது. அன்றே முதல்வா் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். அதன்பிறகு மாா்ச் 27 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாகல்கோட், தாவணகெரே தெற்கு ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஏப். 9 ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 15 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 23 ஆம் தேதி முடிவடைந்தது.

இரு தொகுதிகளிலும் மொத்தம் 71 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்ட பிறகு பாகல்கோட் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 26 வேட்புமனுக்களில் 3 மனுக்களும், தாவணகெரே தெற்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 45 வேட்புமனுக்களில் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மாா்ச் 26 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு குறைந்த நாள்களே உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை மாா்ச் 27ஆம் தேதிக்கு பதிலாக ஒரு நாளுக்கு முன்னதாக மாா்ச் 26 ஆம் தேதி முடிக்க முடிவு செய்யப்பட்டது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பேரவைத் தலைவா் யூ.டி. காதா் தலைமையில் நடந்த அவை அலுவல் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதை பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் தெரிவித்தாா். இதற்கேற்ப பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மாா்ச் 26 ஆம் தேதி முதல்வா் சித்தராமையா பதில் அளிக்கவிருக்கிறாா். அதன்பிறகு 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்படுகிறது.