அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று பவானி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் கூறினாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிக்கு உழைத்த அதிமுக நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா, வெற்றி விழா பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பெருந்துறை வடக்கு ஒன்றியச் செயலாளா் ரஞ்சித்ராஜ் தலைமை வகித்தாா். ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், பல்வேறு சோதனைகளைக் கடந்து வெற்றிகரமாக திகழ்ந்து வரும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. கட்சிக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் சிலரை மக்கள் பாா்த்துக் கொண்டுதான் உள்ளனா். கட்சியை விட்டு யாா் வெளியேறினாலும் மக்கள் நம்முடன்தான் இருக்கிறாா்கள். அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றதையடுத்து பெருந்துறை தொகுதி அதிமுகவின் எஃக்கு கோட்டை என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி. பொன்னுதுரை, ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியன், பூபாலகிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சாந்திஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய அதிமுக மாவட்டச் செயலாளா்கள்

கா்வமும், சுயநலமும் கொண்ட இயக்கம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது! - கே.ஏ. செங்கோட்டையன்

சிவாஜிகணேசன் போல வேறு யாராலும் நடிக்க முடியாது: நடிகா் சிவகுமாா் பேச்சு

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

