தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (ஏப். 21) தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
''தமிழ்நாட்டில் மாற்றம் தொடங்கிவிட்டது. இனி யாராலும் அதனை தடுத்து நிறுத்த முடியாது. மொழி மீது அதிகம் பற்று கொண்டவர்கள் தமிழக மக்கள். அதேபோன்று பாஜக மீதும் தமிழக மக்களின் பற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்திற்கு அருகில் சித்தூர், திருப்பதி உள்ளது. அங்கு தமிழர்கள் அதிகம் உள்ளனர். அவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியிலும், உள்கட்டமைப்பு வளர்ச்சியிலும் ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது. சென்னை அதுபோன்று மாற வேண்டும். வளர்ச்சியை வேகப்படுத்துவதில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இதனை மாநில அரசு செய்யவில்லை.
நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு அதிகம் வாய்ப்பளிப்பதை உறுதி செய்யும் வகையில், மகளிர் ஒடஒதுக்கீட்டிற்காக மசோதா கொண்டுவந்தது பாஜக அரசு. அதனை தமிழ்நாடி அரசு தோல்வி அடையச் செய்துள்ளது.
ஏனெனில், பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதை காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் விருப்பம் இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததை உணர்ந்தீர்களா? இனி மாற்றம் நடக்கும். மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. திராவிட மாடல் போதும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி வேண்டும்'' என சந்திரபாபு நாயுடு பேசினார்.
Summary
Chandrababu Naidu campaigning in support of Nainar Nagendran in Sattur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்வமும், சுயநலமும் கொண்ட இயக்கம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது! - கே.ஏ. செங்கோட்டையன்

சிவாஜிகணேசன் போல வேறு யாராலும் நடிக்க முடியாது: நடிகா் சிவகுமாா் பேச்சு

ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

