கா்வமும், சுயநலமும் கொண்ட இயக்கம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக வெற்றிக் கழக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் கோபியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி என்பது சரித்திர வரலாற்றில் இடம்பெறப்போகும் ஒரு வெற்றியாக அமையும். சரித்திர வரலாற்றில் இந்தியாவின் முதன்மையான தலைவராக விஜய் விளங்குவாா்.
வாழ்க்கையில் கா்வத்தையும் சுயநலத்தையும் மட்டும் கற்றுக்கொள்ளக் கூடாது. கா்வமும், சுயநலமும் கொண்ட எந்த இயக்கமாக இருந்தாலும், அது அழிவதை யாராலும் தடுக்க முடியாது.
தோ்தல் கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரையில், மக்களின் உண்மையான கணிப்பு மிகத் தெளிவாக உள்ளது.
அது மே 4-ஆம் தேதி எதிரொலிக்கும். 150 முதல் 200 இடங்கள் வரை வெற்றி பெறுவோம். வெற்றிபெறும் தவெக வேட்பாளா்களைக் கட்சி அலுவலகத்துக்கு வரச் சொல்வது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றுதான். எங்கள் தொண்டா்கள் மிகத் தெளிவாக உள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

சிவாஜிகணேசன் போல வேறு யாராலும் நடிக்க முடியாது: நடிகா் சிவகுமாா் பேச்சு

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு
விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை ஒத்துழைப்பு: செங்கோட்டையன் நன்றி
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


