கோபி செட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன், தவெகவில் இணைந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ”செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை ஏற்றதே தவறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விரைவில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு பட்டியலிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோபி செட்டிபாளையம் தொகுதியில் 82,612 வாக்குகள் பெற்ற செங்கோட்டையன், 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் நல்லசிவம் 65,992 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரபு 56,232 வாக்குகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Case filed in High Court against Minister Sengottaiyan's victory!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









