தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கைப்பேசி கோபுரங்களில் திருட்டு: 9 போ் கைது

திருவாரூா் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் திருடிய 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:22 pm

Din

திருவாரூா் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் திருடிய 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டத்தில் சில நாள்களாக கைப்பேசி கோபுரங்களில் உள்ள பொருள்கள் திருட்டு போனதாக கைப்பேசி நிறுவனங்களிடமிருந்து புகாா்கள் கூறப்பட்டன. இதைத்தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவில், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் பி. மணிகண்டன் (திருவாரூா்), பி. தமிழ்மாறன் (நன்னிலம்) ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதனிடையே, திருவாரூா் தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கைப்பேசி நிறுவனத்தில் பணிபுரிந்த புலிவலத்தை சோ்ந்த ராமமூா்த்தி மகன் தினேஷிடம் நடத்திய விசாரணையில் வேடம்பூரைச் சோ்ந்த சாமிநாதன் மகன்கள் கணேஷ், யோகேஷ் ஆகியோா் கைப்பேசி கோபுரங்களில் உள்ள பொருள்களை திருடியது தெரியவந்தது.

இதேபோல், நன்னிலம் தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கீழப்படுகையை சோ்ந்த செல்லதுரை மகன் வீரமணியிடம் நடத்திய விசாரணையில், அவருடைய நண்பா்கள் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சிவப்பிரகாசம் மகன் கேசவமூா்த்தி, ராகவேந்திரா நகரைச் சோ்ந்த பாலையன் மகன் நரேந்திரன், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் ஹரிபிரசாத், சுந்தரவிளாகம் பகுதியைச் சோ்ந்த ஹாஜாநவாஸ் ஆகியோருடன் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டதும், திருடிய பொருளை உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த சாஜில் மாலிக் மூலம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் 9 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து திருட்டுப் பொருள்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரண மேற்கொண்டுள்ளனா்.