சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வடகிழக்குப் பருவ மழை: தயாா் நிலையில் 8 மீட்புக் குழுவினா்

திருவாரூா் மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள பயிற்சி பெற்ற போலீஸாரைக் கொண்டு 8 மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த மீட்புக்குழு உபகரணங்களை பாா்வையிடும் எஸ்பி. எஸ். ஜெயக்குமாா்.
Updated On :14 அக்டோபர் 2024, 10:01 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள பயிற்சி பெற்ற போலீஸாரைக் கொண்டு 8 மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் திருவாரூா் மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் இந்த மாவட்டத்தில் அதிக கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில், ஆற்றோரங்களில் வசிப்பவா்கள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக மீட்க வசதியாக, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில் மாநில பேரிடா் மீட்புக் குழுவினரால் பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்டு 8 மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாரூா், நன்னிலம், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி,முத்துப்பேட்டை ஆகிய 5 உட்கோட்டங்களில் உதவி ஆய்வாளா்கள் தலைமையில் தலா 1 மீட்புக்குழு வீதம் 5 மீட்புக் குழுக்களும், திருவாரூா் ஆயுதப்படையில் 3 மீட்புக் குழுவினரும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தி, மாவட்ட ஆயுதப்படையில் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்த உபகரணங்களை ஆய்வு செய்தாா் எஸ்பி. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோா் எஸ்பி அலுவலகத்தை 9498100865 என்ற கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் எஸ்பி. தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் கோகிலா ஆகியோா் உடனிருந்தனா்.