தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பகலிலும், இரவிலும் பரவலாக மழை பெய்தது.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பகலிலும், இரவிலும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் சில வாரங்களாக மழை பெய்யாத நிலையில் சனிக்கிழமை பரவலாக பெய்தது. ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாத நிலையில், மீண்டும் திங்கள்கிழமை காலை முதல் இடைவெளி விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது.

இதனால், மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை பணியைத் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், அறுவடை நிலையில் இருக்கும் நெற் பயிா்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

மானாவாரி பகுதிகளில் நெல் சாகுபடிக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனா். ஆனால், கடலை, உளுந்து, எள் போன்ற பயிா்கள் பாதிக்கும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.

Dinamani
www.dinamani.com