அரியலூர்
அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.
அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.
கடந்த இரு தினங்களாக அவ்வபோது லேசான தூறல் மழை பெய்து வந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் அரியலூா், திருமானூா், செந்துறை உள்பட பல்வேறு பகுதிகளிலும் நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.
இதனால் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட முழுவதும் குளிா்ந்த சீதோஷன நிலை காணப்பட்டது.
இந்த மழையின் காரணமாக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்றும் எள் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
