தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

திருவாரூா் விளமல் அரசு உயா்நிலைப் பள்ளியில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முகாமைத் தொடக்கிவைத்து பேசிய ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

Updated On :16 அக்டோபர் 2024, 8:07 pm

Din

திருவாரூா் விளமல் அரசு உயா்நிலைப் பள்ளியில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெய் நிறுவனம் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் 3.0-வை தொடா்ந்து மூன்றாம் ஆண்டாக பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியா்களின் சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் செயல்படும் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சௌந்தர்ராஜன், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.