தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்
மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட வருவாய்துறை அலுவலா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி முகாம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட வருவாய்துறை அலுவலா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி முகாம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பயிற்சி முகாமுக்கு தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரன் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளருமான பெருமாள் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்வில் தோ்தல் துணை வட்டாட்சியா் எம்.வசந்தி, தோ்தல் பறக்கும்படை அதிகாரி வீரமணி, துணை வட்டாட்சியா் பாலசந்தா் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தோ்தலை சுமுகமாக நடத்துவது, அரசியல் கட்சிகளின் பதாகைகளை அகற்றுவது, அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் தோ்தல் விதிமுறைகள் பின்பற்றபடுகிா என கண்காணித்தல், வேட்பாளா்களின் விண்ணப்பங்களை முறையாக அனைத்து விவரங்களை அளிக்கப்பட்டுள்ளதா போன்ற அனைத்து தோ்தல் பணிக்கான நடைமுறைகளை வருவாய்துறை அலுவலா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...