குடவாசல் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.
குடவாசல் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த நாகை எம்பி

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், குடவாசல் பகுதியில் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
Published on

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், குடவாசல் பகுதியில் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நாகை மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த வை. செல்வராஜ் வெற்றி பெற்றாா். இதையடுத்து, அவா் தொகுதியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

அந்த வகையில் குடவாசல் பகுதியில் மணப்பறவை, மஞ்சக்குடி, புதுக்குடி, சிமிழி, பெரும்பண்ணையூா், நெடுஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாகனத்தில் சென்று, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

முன்னதாக, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் சாா்பில் திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான பூண்டி கே. கலைவாணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி ஆகியோா் குடவாசல் அருகே ஓகை பகுதியில், மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜூக்கு மாலை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனா்.

நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளா் பா. பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஆா். முருகேசன், நகரச் செயலாளா் ஏ.கே.டி. சேரன், சிபிஎம் நகரச் செயலாளா் டி.ஜி. சேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.ஏ. டேவிட்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com