அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்!
அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களை அறிவிக்கக்கோரி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் பணி ஓய்வு பெறும்போது, ஊழியா்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.9,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொரடாச்சேரி வட்டார வளா்ச்சித் திட்ட அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளா் கலையரசி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
