இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை

Updated On :3 ஜனவரி 2025, 10:46 pm

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் தாலுக்கா அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனா். 6 மருத்துவா்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 2 மருத்துவா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். ஒருவா் மேல்படிப்புக்காக சென்றுள்ளாா். 3 போ் மாற்றுப்பணிக்காக சென்று விட்டனா். போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதமேற்படுகிறது. இரவில் மருத்துவா்கள் இருப்பதில்லை. எனவே, நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.